search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்
    X

    வளர்ச்சி திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் ஆய்வு செய்தார்.

    கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்

    • நிழல்வலை குடில் தொழில் நுட்ப சாகுபடி குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
    • பயனாளி பயிர் செய்த குடைமிளகாய், மரவள்ளி, சீரகம், சோம்பு, பல ரக வாழைகள் ஆகிய பயிர்களை பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட செயலாக்கத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அம்மாபேட்டை வட்டா ரத்தில் 2021-22 ஆண்டில் அருந்தவபுரம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்தார்.

    இந்த திட்டத்தால் பயனடைந்த விவசாயி கணபதியின் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அப்போது தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் 1000 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்ட நிழல் வலை குடிலை ஆய்வு செய்தார். நிழல்வலை குடில் தொழில் நுட்ப சாகுபடி குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

    நிரந்தர பந்தல் அமைப்பு சாகுபடி செய்யப்பட்ட பாகல், புடல் ஆகிய பயிர்கள் விவரங்களை கேட்டு அறிந்தார். பயனாளி பயிர் செய்த குடைமிளகாய், மரவள்ளி, சீரகம், சோம்பு, பல ரக வாழைகள் ஆகிய பயிர்களை பார்வையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அவர் பயிர் விவரங்கள் மகசூல் சந்தைப்படுத்துதல், விலை நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை துறை இயக்குனர் (வேளாண் நேர்முக உதவியாளர்) கோமதி தங்கம், மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) சாருமதி, வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பரிமேலழகன், ஊராட்சி தலைவர் சரிதா ஆசைதம்பி, தஞ்சாவூர் துணை வேளாண் அலுவலர் மனோகரன், உதவி வேளாண் அலுவலர் ராமு ஆகியோர் இருந்தனர்.

    Next Story
    ×