search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகள் தீவிரம்

    • சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சேவூர் :

    கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 5-ந் தேதி மாலை 6 மணிக்கு சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. திருவாதிரை நாச்சியார் சிறப்பு அலங்காரத்துடன், முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறவுள்ளது. இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6-ந் தேதி காலை 9 மணிக்கு நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 11 மணிக்கு சிவபெருமானுக்கு ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    மதியம் 2 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் கோவில் வெளிபுற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகரை மூன்று முறை சுற்றும் "பட்டி சுற்றுதல் "நிகழ்ச்சி நடைபெற்று, திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கையால வாத்திய இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சாமி திருவீதி உலா மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு 6-ந் தேதி காலை 9 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×