search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலஉளூா் அரசு பள்ளியில் வானியல் ஆய்வகம்- அமைச்சா் திறந்து வைத்தார்
    X

    அரசு பள்ளியில் வானியல் ஆய்வகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து தொலைநோக்கி கருவியை பார்வையிட்டார். 

    மேலஉளூா் அரசு பள்ளியில் வானியல் ஆய்வகம்- அமைச்சா் திறந்து வைத்தார்

    • விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
    • சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மேலஉளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 921 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு ரூ. 3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிக திறன் கொண்ட தொலைநோக்கி, கோள்களின் இயக்கங்களை துல்லியமாக கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள், நவீன அறிதிறன் தொலைக்காட்சி, வானியல் தொடா்பான சுமாா் 28-க்கும் மேற்பட்ட பொருள்கள், சூரிய மண்டல அமைப்பு, கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள், விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இந்த வானியல் ஆய்வகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தாா். பின்னர் அவர் தொலைநோக்கி கருவிகளை பார்வையிட்டார்.

    இந்த விழாவில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பள்ளி மேலாண் குழுவைச் சோ்ந்தவா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    வானியல் ஆய்வகம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கூறும்போது:

    தமிழகத்தில் மேலஉளூா் அரசுப் பள்ளியில்தான் முதல்முறையாக வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. 2-வதாக கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வகத்தின் மூலம், சூரிய, சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும். மேலும், மாணவா்கள் வானியல் சாா்ந்த புத்தகங்களை படித்து வானியல் அறிவியல் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.

    Next Story
    ×