என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல் பிடுங்கிய விவகாரம்- அமுதா ஐ.ஏ.எஸ். 17, 18-ந் தேதிகளில் 2-ம் கட்டமாக விசாரணை
- அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்திய புகார்கள் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார்.
- அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணையை நடத்துகிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ. கடந்த 10-ந் தேதி அம்பை தாசில்தார் அலுவல கத்தில் தமது விசா ரணையை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தமது அடுத்த கட்ட விசா ரணையை மேற் கொள்ள உள்ளார்.
அம்பை காவல் உட்கோட்டத்தில் காவல் துறை யால் விசாரணை கைதிகளை துன்புறுத்திய தாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விசா ரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்பு பவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்கு மூலங்களை அளிக்க விரும்பு வோர் 17, 18-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாசில்தார் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.
ஏற்கனவே சேரன்மகா தேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவரிடம் புகார், வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை.
ஆனால் உயர்மட்ட விசா ரணை அலுவலர் முன்னிலை யில் மீண்டும் ஒருமுறை வாக்கு மூலம் அளிக்க விரும்பி னாலோ, புகார், கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம். பாதிக் கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.
மேலும் விசா ரணை அலுவலரிடம் நேரடி யாக புகார் அளிக்க இயலாத வர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18-ந்தேதி மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 918248887233 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்