search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூரில், நாளை கடன் வழங்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    பூதலூரில், நாளை கடன் வழங்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
    • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பூதலூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் . சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இச்சிறப்பு முகாமில் சுலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×