என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழ் ஆராய்ச்சிக்கு குறைந்தது 5 பல்கலைக்கழகங்களை தொடங்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ் பேச்சு
- எதிலும் ஆங்கிலம் கிடையாது தாய்மொழி மட்டும்தான் என்பதை உணர வேண்டும்.
- தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கிறது.
தஞ்சாவூர்:
சென்னையில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கடந்த 21-ந் தேதி தமிழைத் தேடி பரப்புரை பயணத்தை பா.ம.க மற்றும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.
தொடர்ந்து 6 ஆம் நாளாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பரப்புரை பயண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
தமிழகத்தில் 1976 ஆம் ஆண்டு வரை 29 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழிக் கல்வி முறை இருந்தது.
விடுதலைக்கு முன்பு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
1999 ஆம் ஆண்டில் 2,122 பள்ளிகளில் மட்டும்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தமிழ் கட்டாயப் பாட மொழியாக இல்லாமலும் இருந்தது.
ஆனால், இப்போது தமிழகத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்போது 2,122 பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கிறது. மீதமுள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் தமிழைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.
தாய்மொழியில் படித்தால் அறிவியல், தொழில்நுட்பத்தை எப்படி கற்றுக் கொள்ள முடியும் என வினா எழுப்புகின்றனர். ஜப்பான், தென் கொரியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தொழில்நுட்பத்துக்குப் பெயர் பெற்றவை.
இந்த நாடுகள் எதிலும் ஆங்கிலம் கிடையாது. தாய்மொழி மட்டும்தான் என்பதை உணர வேண்டும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ் மொழியில் கற்றுத் தரப்பட்டன.
அதற்கான பாட நூல்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதற்கு காரண மானவர்கள் தமிழன்தான்.
அனைத்து பாடங்கள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சித் துறைகளுக்கும் அதை விரிவுபடுத்த யாரும் எதையும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் 50 ஆண்டு கால கனவு. ஆனால், இக்கனவு மட்டும் கைக்கு எட்டாமல் தொடு வானம்போல விலகிக் கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் தமிழைப் பயிற்று மொழியாக்க ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் தமிழில் படிப்பதற்குத் தேவையான நூல்களை உருவாக்க வேண்டும்.
தமிழ் ஆராய்ச்சிக்கு குறைந்தது 5 பல்கலைக்கழ கங்களையாவது தொடங்க வேண்டும். தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.
முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், பதிவாளர் (பொ) தியாகராஜன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ் வழி கல்வி இயக்கம் இளமுருகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
முன்னதாக, அறக்கட்டளை தலைவர் மணி வரவேற்றார். முடிவில் குஞ்சிதபாதம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்