என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சீர்காழியில், தெருமுனை பிரசார கூட்டம் சீர்காழியில், தெருமுனை பிரசார கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/24/1840687-5.webp)
தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
சீர்காழியில், தெருமுனை பிரசார கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து பேசினார்.
- மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் அமுதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து கூட்டத்தில் பேசினர்.
மேலும் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம், மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் வெற்றிலை முருகன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் செல்வ முத்து, இளைஞர் அணி தலைவர் ஹரி, அருள்அழகன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.