search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், தமிழிசை மூவர் மணிமண்டபம் தரமாக புனரமைக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    புனரமைப்பு பணிகள் நடந்து வருவதை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    சீர்காழியில், தமிழிசை மூவர் மணிமண்டபம் தரமாக புனரமைக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

    • வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டரிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சீர்காழி தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு சிறிய வாகனம் மற்றும் வீடுகளில் புகும் பாம்புகளைப் பிடிக்க பாம்பு பிடி கருவி வழங்கிட வேண்டும் என நிலைய அலுவலர் ஜோதி கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று உபகரணங்கள் வாங்கிட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்பு சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    இதை குறித்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு ரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருவதை ஆய்வு செய்து, பணிகளை தரமாக செய்திட ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்திட வருங்காலங்களில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் சீர்காழி நகராட்சியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் வாசுதேவன் மற்றும் நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பழைய பஸ் நிலைய பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அன்பழகன், ஒப்பந்ததாரர் விஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×