search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் மாநில தலைவர் அருள்மொழி பேசினார். 

    சீர்காழியில், வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்

    • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக ராமதாஸை முன்னிறுத்த உள்ளோம்.
    • ராஜராஜசோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாக்கம்.சக்திவேல் தலைமை வகித்தார்.வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி. பழனிச்சாமி, மாவட்ட தலைவர் அன்பழகன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், முன்னாள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் துரை.முத்து வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது பேசிய அவர் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தி நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஆகவே நாங்கள் இப்பொழுதே பிரச்சாரத்தை தைரியமாக துவங்குவோம்.

    வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ராமதாஸ் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றார்.

    மேலும் ராஜராஜ சோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சோழன் நாட்டை ஆண்டான்.

    அவர் இந்துவா என்ற சர்ச்சையை ஏன்? கிளப்ப வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரி நீர் சென்று கடலில் கலந்தது அதனைப் பற்றி யாரும் பேசவில்லை.

    ராஜராஜ சோழன் இந்துவா என்று ஏன் பேச வேண்டும் என்றார்.

    நிறைவில் சீர்காழி நகர வன்னியர் சங்க தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×