search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு மலைக்காவலர் கோவிலில்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
    X

    மலைக்காவலர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்த காட்சி.

    திருச்செங்கோடு மலைக்காவலர் கோவிலில்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    • எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் 1895-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் சாலையில் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக் காவலர் கோவில்உள்ளது இங்கு புகழ்பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக் கோவிலை காத்து அந்நியர்கள் படையெடுப்பின் பாதுகாத்த ஸ்ரீ நெல்லையப்ப சுவாமி ஸ்ரீ வேமண்ணா சுவாமி உருவங்கள் உள்ளன.

    இந்த கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டது எப்போது என்பது குறித்து எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் 1895-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது .

    இது தவிர வேற எந்த ஆவணமும் இல்லாத இந்த கோயிலுக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப் பட்டது. விரைவில் இந்த புனரமைப்பு பணிகளை செய்து குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நத நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இந்த கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழமை வாய்ந்த இந்த கோவிலை சிறப்பாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு பகுதியினையும் ஆய்வு செய்தார். காலியாக உள்ள இடங்களில் பூங்கா அமைத்தும் பொதுமக்கள் பார்வையிடவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்றால் கூடுதலாக நிதி ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும், அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவிஆணையர் ரமணி காந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×