search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூர் அருகே ஏ.டி.எம். கொள்ளையர்கள் 3 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்களுடன் வடலூர் போலீசார்.

    வடலூர் அருகே ஏ.டி.எம். கொள்ளையர்கள் 3 பேர் கைது

    • ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
    • 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர் :

    வடலூர் ராகவேந்தி ரா சிட்டியில் தேசியமய மாக்கப்பட்ட இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் முகப்பில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவே மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதோடு, அதிலிருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீதமிருந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் வடலூர் கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 56), வடலூர் ஆர்.கே. நகர் ராஜேந்திரன் (34), நெய்வேலி இந்திராநகர் ராஜா (42) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×