என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
- பூசாரிப்பட்டி பாலம் அருகே பஸ் வந்தபோது காடையாம்பட்டி தாலுகா ேகானம்பட்டியை சேர்ந்த ராஜா குபேந்திரன் (35) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்தார்.
- இதனால் கண்டக்டர் செம்மலை, பஸ்சுக்கு வழிவிட்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செம்மலை (வயது 51). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று மதியம் 2.50 மணிக்கு அரசு பஸ்சில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். டிரைவர் கோவிந்தராஜ் பஸ்சை ஓட்டினார்.
பூசாரிப்பட்டி பாலம் அருகே பஸ் வந்தபோது காடையாம்பட்டி தாலுகா ேகானம்பட்டியை சேர்ந்த ராஜா குபேந்திரன் (35) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்தார். இதனால் கண்டக்டர் செம்மலை, பஸ்சுக்கு வழிவிட்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.
ஆனால் ராஜா குபேந்திரன் கேட்கவில்லை. தொடர்ந்து கண்டக்டரிடம் அவர் வாய் தகராறில் ஈடுபட்டார். மேலும் பஸ் கண்டக்டர் செம்மலையை தாக்கினார். இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் அவரை பிடிக்க முயன்றார்.
ஆனால் அங்கிருந்து ராஜா குபேந்திரன் தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த செம்மலை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார், விசாரணை நடத்தி ராஜா குபேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.