என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழிப் பண்ணை உரிமையாளர் மீது தாக்குதல்
    X

    கோழிப் பண்ணை உரிமையாளர் மீது தாக்குதல்

    • பரளி ஒத்தையூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 65) . இவர் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.
    • பழனிச்சாமியை தமிழ்ச்செல்வன் அவரது மகன் தனசேகரன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பரளி ஒத்தையூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி

    ( வயது 65) . இவர் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு வெங்கடாசலம், செல்வம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பழனிச்சாமிக்கும் பக்கத்து தோட்டத்துக்காரரான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (60) என்பவருக்கும் வழிதடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பழனிச்சாமியை தமிழ்ச்செல்வன் அவரது மகன் தனசேகரன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனிச்சாமியை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

    இது குறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய தமிழ்ச்செல்வன், அவரது மகன் தனசேகரனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×