என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே தொழிலாளி மீது தாக்குதல்
- கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி லீலாவதியின் அண்ணன் மாணிக்கராஜை அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ஆனந்தராஜ் அரிவாளால் வெட்டினார்.
- ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், செல்வகுமார் ஆகியோர் கணேசனை அவதூறாக பேசி தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பு, நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது50). தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி லீலாவதியின் அண்ணன் மாணிக்கராஜை அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ஆனந்தராஜ் அரிவாளால் வெட்டினார்.
வழக்கு வாபஸ் பெற மறுப்பு
இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெறும் படி ஆனந்தராஜ், கணேசனிடம் கூறி வந்தார். ஆனால் அதற்கு கணேசன் மறுத்து விட்டார்.
சம்பவத்தன்று கணேசனை வழிமறித்த ஆனந்தராஜ், அவரது உறவினர் முருகேசன் மகன் செல்வகுமார் ஆகியோர் உனது மைத்துனரிடம் கூறி வழக்கை வாபஸ் வாங்கு என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.
கொலை மிரட்டல்
இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், செல்வகுமார் ஆகியோர் கணேசனை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக, ஆனந்தராஜ், செல்வகுமாரை தேடி வருகின்றனர்.






