search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    ஆராயி குடும்பத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 

    சேலம் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி

    • கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
    • இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.

    மகுடஞ்சாவ:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஆராயி (வயது 42). இவருக்கு மோகனா (25) என்ற மகளும், பிரியா (22) என்ற தங்கையும் உள்ளனர்.

    இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், இடங்கண சாலை நகராட்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 3 பேர், வீடு கட்ட ரூ.2 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படு கிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடுகட்ட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியதாக ஆராயி கடந்த 15-ந் தேதி சேலம் கலெக்டர் அலு வலகத்தில் புகாரளித்தார்.

    இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்த சங்ககிரி வருவாய்து றையினர், ஆராயி வீடு கட்ட வைத்திருந்த பொருட்கள், அவரது கூரை வீடு மற்றும் மரங்களை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியா உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் சம்பந்த பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆராயி குடும்பத்தினர் இடங்கணசாலை வி.ஏ.விடம் மனு அளித்து சென்றனர்.

    இது குறித்து ஆராயி கூறியதாவது:-

    நான் கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலத்தில் குடியிருந்து வருகிறேன். அதற்கு ரசீது உள்ளது. சில தினங்களுக்கு முன் 5 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியில் அட்டை வீடு கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது, தி.மு.க.,பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.

    நான் பணம் தர மறுக்கவே, பணம் கொடுக்கவில்லை என்றால் உன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்த்துவிடுவேன் என மிரட்டி சென்றார். தற்போது, அவர் கூறியது போல் நேற்று அதிகாரிகள் உதவியுடன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்க்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதனால் குழந்தை மற்றும் தங்கையுடன் வீடு இல்லாமல் தவிக்கிறேன். எனவே அரசு எனக்கு அதே இடத்தில் 2 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானம் செல்ல 2 இடங்களில் வழியுள்ள நிலையில் வேண்டும் என்றே எங்கள் நிலத்தை கேட்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×