search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது; கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் மகாபாரதி.

    தமிழ் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது; கலெக்டர் தகவல்

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளன.
    • தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெற வேண்டும்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கல்லூரி அளவில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 10-ம் தேதி நடக்கிறது.

    இது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் மயிலாடுதுறையில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது :-

    மாபெரும் தமிழ்க் கனவு எனும் பண்பாட்டு பரப்புரை வருகிற 10ஆம் தேதி செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளன.

    புத்தக கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலைவாய்ப்பு, உயர் கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன் பெறுதல், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    கல்லூரி மாணவ–மாணவிகளின் சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி ஆகிய 2 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    சொற்பொழிவிற்கு பின் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி ஆகிய 2 விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ – மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்யுரேகா (மயிலாடுதுறை) , அர்ச்சனா (சீர்காழி) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×