என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு விருது
Byமாலை மலர்20 Oct 2022 1:48 PM IST
- உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
- சிறந்த வட்டார மருத்துவமனைக்கான விருது வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு கிடைத்தது.
சிவகிரி:
உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் குருதி கொடை சிறப்பாக பெற்று தந்த சிறந்த வட்டார மருத்துவமனைக்கான விருது வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு கிடைத்தது. இதற்கான விருதை வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய்க்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள், வாசு வட்டார மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள், அனைத்து ஊழியர்களும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Next Story
×
X