search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு
    X

    நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

    • பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.
    • அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் விஜயகுமார் அறிவுரைப்படி, தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதலில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வியை ஒவ்வொரு கிராமங்களாக சென்று வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள இயலாத உடல்நிலை அல்லது விருப்பப்படாத சூழலில் கணவனே தாமாக முன்வந்து குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றது.

    இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறும்போது:-

    ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு மிகவும் எளிய சிகிச்சை முறை மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.

    இதனால், வாழ்வில் எவ்வித தடையுமில்லை, பக்கவிளைவுகள் ஏதுமில்லை, எப்போதும் போல் கடின உழைப்பை மேற்கொள்ளலாம், சிக்கனமான சிகிச்சை என்பதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும், அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது என்றார்.

    Next Story
    ×