என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மராத்தான்
- மராத்தானில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் பேசும்போது போதை இல்லா சமூகம் உருவாக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.
நெல்லை:
போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் வண்ணம் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினிமராத்தான் பாளையில் இன்று நடைபெற்றது.
இதனை நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் துணைகமிஷனர் சீனிவாசனும் மராத்தான் ஓடினார். பாளை தனியார் கல்லூரியில் தொடங்கிய மராத்தான் அண்ணா விளையாட்டரங்கம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தது.
அப்போது பேசிய துணைகமிஷனர் சீனிவாசன் போதை இல்லா சமூகம் உருவாக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.
மேலும், மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் இன்ஸ்பெக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.