search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம்
    X

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம்

    • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் மணிமுத்தாறு செல்லும் சாலையில் நடைபெற்றது.
    • மாரத்தான் நடைபயணத்தை பேரூராட்சி தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரைகொண்டாடப்படுவதை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் இன்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கோட்டவிளை தெரு, மணிமுத்தாறு செல்லும் சாலையில் பாப்பாங்குளம் முக்கவர் சாலை பஸ் நிறுத்தம் வரை நடைபயணம் நடைபெற்றது . பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலையில், தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரிய செல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்துலட்சுமி, சையத் அலி பாத்திமா மற்றும் பேரூராட்சி இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வை பேரூராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்து நன்றி கூறினார்.

    Next Story
    ×