search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில் விழிப்புணர்வு கூட்டம்
    X

    கூட்டத்தில் மன்ற பொறுப்பாசிரியர் ராஜாராம் பேசினார்.

    முத்துப்பேட்டையில் விழிப்புணர்வு கூட்டம்

    • பொருள்களின் விலை, காலாவதி நாள் பற்றி கூறி பொருள்களை வாங்கும்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • தேவையை தேடி வாங்குங்கள் . தேடி வரும் பொருளை வாங்கி குப்பை ஆக்காதீர்கள்

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அமுதரசு தலைமையேற்று நுகர்வோர் யார், நுகர்வோரின் பொறுப்பு, கடமை பற்றி கூறி விழிப்புடன் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

    பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர் மகேஷ் நுகர்வோர் அமைப்பு முதன் முதல் தோன்றியது, நுகர்வோர் அமைப்புச் சட்டம், நுகர்வோரின் பாதுகாப்பு, பொருள்களின் விலை, காலாவதி நாள் பற்றி கூறி கவனமுடனும், கலப்படமற்ற பொருள்களை வாங்கும்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மன்ற பொறுப்பாசிரியர் இராஜாராம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பற்றி கூறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - நுகர்வோருக்கு பில்லே ஆயுதம் என கூறி எந்த பொருள் வாங்கினாலும் ரசீது வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .

    மேலும், விளம்பரங்கள் வியாபார யுக்தி, தள்ளுபடியும் இலவசங்களும் நம்மை கவரும் சக்தி. எனவே தேவையை தேடி வாங்குங்கள் . தேடி வரும் பொருளை வாங்கி குப்பை ஆக்காதீர்கள் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 9, 11 ஆம் வகுப்பு குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர் சக்திபாலா நன்றி கூறினார்.

    Next Story
    ×