search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
    X

    பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

    • ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.

    மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.

    Next Story
    ×