search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் திருச்செங்கோடு புறநகர இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் பேசிய காட்சி.

    திருச்செங்கோட்டில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவிகள் பள்ளி செல்லும் போது வீட்டின் அருகிலோ, பேருந்து நிறுத்தத்திலோ, பேருந்திலோ யாராவது பாலியல் சீண்டல் செய்தால் அவர் மீது புகார் செய்து தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் காவல்துறைக்கு உள்ள பிரத்யேக தொலைபேசி எண்ணில் அழைத்து பேசி னாலும் 1091 என்ற எண்ணில் அழைத்து பேசி னாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளையும் காவல்துறை எடுத்து வரு கிறது. எனவே மாணவிகள், பெண் குழந்தைகள் பயப்ப டாமல் சமூக விரோதிகள் குறித்தும் பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் குறித்தும் புகார் செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, ரஞ்சித் குமார், உளவுத்துறை காவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×