என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோகனூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
மோகனூர், பரமத்தியில் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி
- பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
- பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பொறுப்பாசிரியர் தேவப்பிரியா, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு) சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல், கண்டறியப்பட்ட குழந்தை களை முறையாக பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
பேரணியில் பரமத்தி வட்டார வளமைய ஆசிரியர்கள் பார்வதி, செல்வராணி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆயத்த முகாம் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லாவண்யா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






