என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடி பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பெரும் பூஜை
- புளியங்குடி உள்ள முப்பெரும் தேவியர் கோவிலில் தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.
- அம்மன்களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
புளியங்குடி:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.
கோவிலில் உள்ள அம்மன் குருநாதர் சக்தியம்மா (ஆண்) பெண் உருவத்தில் சேலை அணிந்து அருள் வாக்கு கொடுப்பதால், வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் சேலை எடுத்து கொடுப்பார்கள்.இதனை பவானி அம்மன் நேரடியாக பெற்றுக் கொள்வதாக ஐதீகம். இதனால் பக்தர்கள் இந்த நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
30-ம்ஆண்டு ஐப்பசி மாதம் மகா பெரும் பூஜை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மன் களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 8 மணி கோவில் குருநாதர் சக்தியம்மா இந்நாளில் மட்டும் முழு பெண் உருவத்தில் இருந்து, ஒரு கையில் அக்னி சட்டியுடன் கொடுக்கும் அருள் வாக்கு நிகழ்வு நடந்தது. இந்த அருள் வாக்கு ஒரு வருடத்திற்கு உரிய பலனை நமக்கு கொடுக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படும் ஐதீகம்.
பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தை வரம், திருமணத்தடை, வியாபார முடக்கம், தீராத நோய் நொடி, துன்பங்களை சரியாகும் என்பது நம்பிக்கை. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 10 மணி நேரம் அருள்வாக்கு தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 முதல் மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
திருவிழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கல்கத்தா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்