search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபர் மசூதி இடிப்பு தினம்: கடலூர் மாவட்டத்தில்  ெவடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    பாபர் மசூதி இடிப்பு தினம்: கடலூர் மாவட்டத்தில் ெவடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

    • இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
    • பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனை யொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இப்பணியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லியோ மற்றும் பீட் ஆகிய மோப்ப நாய்களுடன் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருவதோடு, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் அந்தந்த ெரயில் நிலையங்களில் ெரயில்வே போலீசார் வெடிகுண்டு கருவிகள் கொண்டு ெரயில் பயணிகள் மற்றும் ெரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

    Next Story
    ×