search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
    X

    இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை

    தஞ்சை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

    • தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம்.
    • நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மசூதிகள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லரியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தஞ்சை மாநகர கிளையில் இமாம் சேக் அப்துல் காதர் பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசும்போது,

    இஸ்லாமிய மார்க்கத்தின் இரு பெருநாட்களும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அறப் பணிகளைச் செய்து வருகின்றது.

    இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.

    இதை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகளை வழங்கி உள்ளோம் .

    மேலும் இந்த ஆடு, மாடுகளின் தோல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்து வருகின்றோம் என்றார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமாக இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர்அப்துல்லாஹ்,

    செயலாளர் ஜியாவூதின், பொருளாளர் சலீம்,துணைதலைவர் ஹலித் ,துணை செயலாளர்

    சர்தார் பாட்ஷாமற்றும் அனைத்து நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் பாபநாசம், அய்யம்பேட்டை, வல்லம், அம்மாபேட்டை, கும்பகோணம், மதுக்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×