search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை
    X

    கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை

    • சிலைகள் வைக்க போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளின் அனுமதி தேவை
    • மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்ல கூடாது

    கோவை,

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் விநாயகர் சிலைகளை பிரதி ஷ்டை செய்து வழிபட இந்து அமைப்பினர் தயாராக வருகிறார்கள். அவ்வாறு விநாயகர் சிலை வைக்க கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள கட்டுப்பாடு விவரம் வருமாறு:-

    1. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் சிலைகள் வைக்க விரும்பும் அமைப்பினர், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

    2. கோவை மாநகரில் சிலை வைக்க அந்தந்த பகுதியில் உள்ள உதவி காவல் ஆணையரிடமும், மற்ற இடங்களில் சார்ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடமும் தடையில்லா சான்று பெற்று இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடம் தனியாருக்கு சொந்தமானது எனில், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமும், அரசு புறம் போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும்.

    3. ஒலி பெருக்கிகள் பயன்படுத்த காவல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

    4. சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதிகள் ஆகியவை குறித்து தீயணைப்பு அலுவலரிடமும் சான்று பெற வேண்டியது அவசியம்.

    5. தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்காக தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.

    6. விநாயகர் சதுர்த்தி விழவையொட்டி நிறுவப்படும் சிலைகள் தூய களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு. வாரியம் தடை செய்த பொருட்கள் மற்றும் வண்ணங்களை கொண்டு சிலைகள் உருவாக்கக்கூடாது. எளிதில் நீரில் கரையும் நச்சு அல்லாத இயற்கை வண்ணங்களை உபயோகப்படுத்த வேண்டும். ரசாயன சாயங்களை பயன்படுத்தக் கூடாது.

    7. சிலைக்கான பந்தல் அமைக்கும் போது எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த கூடாது. பந்தல் அருகே தற்காலிக முதலுதவி மற்றும் அவசர கால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வழிபாட்டு பகுதிகளை சுற்றிலும் எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருட்களை வைத்திருக்க கூடாது.

    8. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்து வமனை, கல்வி நிறுவ னங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிலைகள் வைக்கக் கூடாது. கூம்பு வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. பெட்டி வகை ஒலிபெருக்கிகளை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

    9. சிலை நிறுவப்பட்ட இடங்களில் போதிய மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும். அங்கு தீ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை தீயணைப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    10. நான்கு சக்கர வாகனங்கள், மினி லாரி மற்றும் டிராக்டர் ஆகியவற்றில் சிலைகளை கொண்டு செல்லலாம். ஆனால் மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது. விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    11. விநாயகர் சிலை உள்ள இடங்கள் மற்றும் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு, வெடிபொ ருட்களை பயன்படுத்த அனுமதியில்லை. சிலைகளை நீரில் கரைப்பதற்கு முன்பாக மலர்கள், துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை தனியாக பிரித்து விட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் உத்தரவில் கூறி உள்ளார்.

    Next Story
    ×