search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வனப்பகுதியில் மின் கம்பங்களை சுற்றி தடுப்பு வேலி
    X

    கோவையில் வனப்பகுதியில் மின் கம்பங்களை சுற்றி தடுப்பு வேலி

    • மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
    • அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று பலியானது. மின் கம்பம் உடைந்து யானையின் மீது விழுந்ததில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

    இதையடுத்து மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரையறுத்து அந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்தல், உயரமான மின் கம்பங்களை அமைப்பது, காப்பிடப்பட்ட மின் கம்பிகளை பயன்படுத்துதல், மின் கம்பங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகள் மற்றும் மின் கம்பிகளை ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மனித - வன விலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து தாசில்தார், வனச்சரக அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×