search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் இயக்கம்
    X

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் இயக்கம்

    • மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயணிக்க ஏற்பாடு
    • பேட்டரி காரில் சென்று அங்கு உள்ள பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்தனர்

    ஊட்டி,

    சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கு கிறது.

    இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடக்கும். செப்டம்பர், அக்டோபரில் 2-வது சீசன் களைகட்டும். ஊட்டியில் தற்போது, 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் அங்கு சுற்றுலா பயணி களின் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது.

    நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் அரிதாக காணப்படும் தாவரங்கள் நடப்பட்டு பராம ரிக்கப்பட்டு வரு கின்றன.

    அதிலும் குறிப்பாக இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம் ஆகி யவை, சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது. ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தை களுடன் வரும் பெண்கள் ஆகியோர் மேடான பகுதி யில் உள்ள இத்தாலி யன்பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு பூத்திருக்கும் மலர்களை கண்டு ரசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனா ளிகள், முதியவர்களின் வசதிக்காக பேட்டரி வாக னத்தை அறிமுகப்படுத்து வது என பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் சேவை தற்போது அமலுக்கு வந்து உள்ளது.

    இதில் சுமார் 6 பேர் அமர்ந்து பூங்காவை சுற்றிப்பார்க்க இயலும்.

    எனவே சுற்றுலா பயணி கள் தற்போது பேட்டரி காரில் பயணித்து, தாவிர வியல் பூங்காவை சுற்றி வந்து, அங்கு உள்ள மலர்கள் மற்றும் பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×