என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் கரடி பலி
- தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது.
- கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே மூப்பர்காடு பகுதியில் ஓலேண்டு தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்து கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது. பழங்குடியின கிராமமான மானார் முதல் மூப்பர் காலனி வரை செல்லும் தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் எத்தனை வனவிலங்குகள் இறந்து உள்ளன என்று வனத்துறையினரால் கணக்கிட முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று வனத்துறை கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் செல்வகுமார், வனவர் திருமூர்த்தி, வனகாப்பாளகள் லோகேஷ், விக்ரம், வீரமணி மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கரடி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. கரடியின் காலில் மின்கம்பி சுற்றிய நிலையில் இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடியின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை சேகரித்துக் கொண்டனர்.
கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.