search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் பீர் விற்பனை அமோகம்
    X

    சேலம் மாவட்டத்தில் பீர் விற்பனை அமோகம்

    • சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது.
    • விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி ரூ.40 கோடி மதிப்பில் பீர் மற்றும் பிராந்தி வகைகள் விற்பனையாகி வருகிறது.

    வெயில் தாக்கம் அதிகரிப்பு

    இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக பிராந்தி வகை–களை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளை விட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.

    விற்பனை அதிகரிப்பு

    அதன்படி தற்போது ேகாடை காலத்தை முன்னிட்டு வெயில் அதிகரித்து இருப்பதால், மது பிரியர்கள், பீர் வகைகளுக்கு மாறி விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது என டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×