என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டையில் பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்
- கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன்,ராமநாதன் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ் முத்துலட்சுமி, பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி தலைவி மகாலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் குருசாமி, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு கனிம வள கொள்ளையை தடுக்க கோரி செங்கோட்டை தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.