search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.82.51 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை
    X

    ரூ.82.51 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

    • 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.
    • 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சி லைன் கெல்லை கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.

    அதே போல், கவேரிப்பட்டணம் குண்டலப்பட்டி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தில், கே.ஆர்.பி., அணை வலதுபுற கால்வாய் மீது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி வேட்டியம்பட்டி கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியத்தில், 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்வெட்டும், 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

    கூலியம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அம்மனேரி கிராமத்தில் 6 லட்சத்து 68 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், மற்றொரு இடத்தில் 4 லட்சத்து 93 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும், ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு இடங்களில், முள்கம்பி வேலி மற்றும் கிரீன் செட்டும், சவுளூரில் 9 லட்சத்து 60 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.82 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பையூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஐ.டி.பிரிவு செயலாளர் வேலன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சியின் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×