search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி யூனியன் அலுவலகத்தில் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்த காகம், மைனா
    X

    உயிரிழந்த காகம் மற்றும் மைனா.

    செம்பட்டி யூனியன் அலுவலகத்தில் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்த காகம், மைனா

    • ஆத்தூர் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன.
    • சில காகம் மற்றும் மைனாக்கள் உயிரிழந்தன. இதைபார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    செம்பட்டி:

    செம்பட்டியில் ஆத்தூர் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இங்கிருந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென காகம் மற்றும் மைனாக்கள் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தது.

    இதில் சில காகம் மற்றும் மைனாக்கள் உயிரிழந்தன. இதைபார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் பறவைகள் இறந்தனவா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×