என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமை
Byமாலை மலர்15 Feb 2023 2:31 PM IST
- குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர், பாடந்துறை மற்றும் தேவர் சோலை பேரூராட்சி கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த காட்டெருமைகளை வனத்திற்குள் விரட்டுவதற்கு வனத்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே கிராமங்களில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×