search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா ஆஜர்
    X

    சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆஜராகி கையெழுத்திட்டு வந்த காட்சி.

    சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா ஆஜர்

    • நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    • வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யா, அந்த கட்சி நிர்வாகி கவுசிக் சுப்ரமணியம் ஆகியோர் மீது சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் அளித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற மேற்கண்ட இருவரும் சிதம்பரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜராகினர். அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும். என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலையில் நிபந்தனை ஜாமீன் கையேட்டில் எஸ்.ஜி.சூர்யா கையெழு த்திட்டார். அவருடன் பாஜக முன்னாள் ராணுவவீரப் பிரிவு செயலாளர் பால சுப்பிரமணியன், விவசாயி அணி தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

    Next Story
    ×