search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசை கண்டித்து  ராசிபுரத்தில் பா.ஜ.க.வினர்   உண்ணாவிரதப் போராட்டம்
    X

    பா.ஜ.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    தமிழக அரசை கண்டித்து ராசிபுரத்தில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரதப் போராட்டம்

    • பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.
    • தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் வி‌.பி.துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மாநில நெசவாளர் பிரிவு தலைவர் கே.எஸ்.பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேதுராமன், வடிவேல், நாகராஜன், சத்தியபானு, விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் ஆர்.டி.இளங்கோ, மாவட்ட பொருளாளர் தங்கபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், கதிரேசன், சித்ரா, நகர தலைவர் வேல்முருகன், மத்திய அரசு திட்டப்பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.

    Next Story
    ×