என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க.வை பார்த்து பா.ஜனதா பயப்படுகிறது - ஆ.ராசா எம்.பி. பேச்சு
- நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
- ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாவடட அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், பொருளாளர் வண்ணை சேகர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தொகுப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெசவாளரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:
ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை.
முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க.வை புலுவை போல் பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தனர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதிக்கு தான் உண்டு.
கொள்கை, கோட்பாடு கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதா நம்மை கண்டு பயப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அப்துல் கையூம், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், இளைஞரணி மீரான் மைதீன், நிர்வாகிகள் வீரபாண்டியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்