search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவ மக்களுக்காக பா.ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் - தூத்துக்குடி கோவில் விழாவில் சசிகலா புஷ்பா பேச்சு
    X

    கோவில் விழாவில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய காட்சி. அருகில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    மீனவ மக்களுக்காக பா.ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் - தூத்துக்குடி கோவில் விழாவில் சசிகலா புஷ்பா பேச்சு

    • விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும், மீனவர் அணி பார்வையாளருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
    • மீனவ மக்களுக்காக பாரதீய ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதி மீனவர் காலனியில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் ஆலயம் 17-ம் ஆண்டு கொடைவிழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை செல்லுதல், சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் நள்ளிரவு சாம வேட்டைக்கு செல்லுதல், அருள்வாக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கொடை விழா ஏற்பாடு களை கோவில் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும், மீனவர் அணி பார்வையாளருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், மீனவ மக்களுக்காக பாரதீய ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும். மேலும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த ஆலயத்தை சீரமைக்க துறைமுக கழகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், தெற்கு மண்டல தலைவர் மாதவன், மாவட்ட துணைத் தலைவர் தங்கம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், செயற்குழு உறுப்பினர் முருகன், இளைஞர் அணி தலைவர் முனியசாமி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், தெற்கு மண்டல செயலாளர் பாலகுமார், துணைத் தலைவர் பொய் சொல்லலான், வக்கீல் முருகன், மகளிர் அணி தலைவி செல்வி, துணைத்தலைவி சிலம்புலி, தொழில் பிரிவு மண்டல் தலைவர் சங்கர், கணேஷ் விக்கி, ராஜபாண்டி, அருள் முருகன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொடை விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×