என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவாரூரில் புத்தக கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி
- படிக்கும்போது ஏற்படும் மனஅமைதியினால் உடல் ஆரோக்கியமாக இருந்தது புத்தகம் என்பது கேடயம் போன்றது.
- மறந்து போன வாசிப்பு பழக்கம் மீண்டும் துளிர்விட இந்த புத்தக கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கு பெறுவோம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிடும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.
ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பதாகையை வெளியிட்டு பேசும்போது,
வாசிப்பு பழக்கம் தற்போது குறைந்துவிட்டது. படிக்கும்போது ஏற்படும் மனஅமைதியினால் உடல் ஆரோக்கியமாக இருந்தது.புத்தகம் என்பது கேடயம் போன்றது.
வாசிப்பினால் நமக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். புத்தகங்களை பற்றி அறிஞர்கள் கூறும்போது தங்களை அறிஞர்களாகவும், தலைவர்களாகவும், மாற்றியது புத்தகங்கள் தான் எனக் கூறுகின்றனர்.
எனவே மறந்து போன வாசிப்பு பழக்கம் மீண்டும் துளிர்விட இந்த புத்தக கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கு பெறுவோம். தேவையான புத்தகங்களை வாங்கவேண்டும், பல்வேறு பேச்சாளர்களின் பயனுள்ள சொற்பொழிவை கேட்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்படி புத்தக திருவிழாவை வெற்றிபெறச் செய்யும் விதமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி மக்கள் 5000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொள்ள விழிப்புணர்வு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.