search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தகத் திருவிழா கலெக்டர் தகவல்
    X

    புத்தகத் திருவிழா கலெக்டர் தகவல்

    • நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பது பற்றியும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
    • புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளா்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன.

    நாமக்கல்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் புத்தகத் திருவிழாவை நடத்துவது தொடா்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது-

    விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவா்களைப் போற்றும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திர போராட்ட வீரா்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பது பற்றியும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

    கல்வி வளா்ச்சியில் புத்தகங்களின் பங்கு மிகு முக்கியமானதாகும். புத்தகங்கள்தான் சாதாரண குடிசை வீட்டில் பிறந்தவா்களை கூட உலகறிந்த அறிஞா்களாகவும், தலைவா்களாகவும், சிந்தனையாளா்களாகவும், உயா் அதிகாரிகள், ஆட்சியா்களாகவும் உருவாக்கி உள்ளன. தினந்தோறும் புத்தகங்களை வாசிப்பது வாழ்வின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன.

    அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் அமுத பெருவிழாவுடன் சோ்ந்து புத்தகத் திருவிழாவும் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளா்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×