என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் முதல் முறையாக புத்தகத்திருவிழாவை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா
- மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது.
- இப்புத்தக்கண்காட்சியில் 60-–க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்அமைக்கப்ட்டுள்ளன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினை் மாவட்ட கலெக்டர் கலெக்டர் லலிதா முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதலமைச்சர் உத்தரவு்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. இப்புத்தக்கண்காட்சியில் 60-–க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்அமைக்கப்ட்டுள்ளன.
வாசிப்பு ஒன்றே நம் வாழ்வை மேம்படுத்தும்.
பார்வையைவி சாலப்படுத்தும் மனிதனை மனிதனாகவும், சாதாரண மனிதனை சாதனை மனிதனாகவும் மாற்றவல்லது வாசிப்பு ஒன்றே.
"ஒரு நூலகம்திறக்கப்படும் பொழுது 100 சிறைச்சா லைகள் மூடப்படுகிறது" என்பார் சுவாமி விவேகானந்தர்.
இன்று இங்கு நூற்றுக் கணக்கான நூலகங்கள் போல் இப்புத்தகத் திருவிழாதுவக்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி நம் அறிவை ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது நமது கடமை.
உங்கள் விட்டுப்பிள்ளைகளைத் தவறாது அழைத்து வந்து, கையில் காசு கொடுத்து அவர்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்க செய்யுங்கள்.
'புதிதாக மலர்ந்திருக்க மயிலாடுதுறை மாவட்டம் புத்தகத் திருவிழா மூலம்புதிய வரலாறு படைக்க வேண்டும்'நூலகத்தில் அதிக நேரம் செலவளித்தால் அறிவு வளரும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னிர்செல்வம், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், ஒன்றியக்குழுத்தலைவர்கள் காமாட்சி மூர்த்தி (மயிலாடுதுறை), கமலஜோதிதேவேந்திரன் (சீர்காழி), ஜெயபிரகாஷ் (கொள்ளிடம்), மகேந்திரன்(குத்தாலம்), சீர்காழி நகரமன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி(ம) ஊராட்சிகள் துறை இணை இயக்குநர்முரு கண்ணன்இணைஇயக்குநர் (வேளாண்மை) சேகர் உதவிஆணையர் (கலால்) கோ.அர.நரேந்திரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ஜெயபால், ஜெ.பாலாஜி (பொது), துணைப்பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், மற்றும் முன்னால் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன், ஏ.வி.சி கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவி்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






