என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் சிறுமி முன்பு நிர்வாணமாக நின்ற வாலிபர்- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
- கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதே போல நடந்து கொண்டதாக கூறினார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அன்னூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது அவரை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அனுப்பினார்.
சிறுமி செல்லும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்குமார் (வயது 32) என்பவர் குடிபோதையில் நிர்வாணமாக நின்று கொண்டு சிறுமியை சைகை காட்டி அழைத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி தனது வீட்டிற்கு செல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்தார்.
கடைக்கு சென்ற தனது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பிவராததால் அவரது தாய் வெளியே சென்று பார்த்தார். அப்போது வெளியே சிறுமி பதட்டமாக நின்று கொண்டு இருந்தார். அவரை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று என்ன நடந்தது என விசாரித்தார்.
அப்போது சிறுமி தனது தாயிடம் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்குமார் நிர்வாணமாக நின்று கொண்டு சைகை காட்டி அழைத்ததாக தெரிவித்தார்.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதே போல நடந்து கொண்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் குடிபோதையில் 7 வயது சிறுமி முன் நிர்வாணமாக நின்று சைகை காட்டி அழைத்த ரமேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






