என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
- மேட்டுப்பாளையத்தில் உள்ள 9 அரசு தொடக்கப்ப ள்ளியில் உள்ள 1,119 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது.
- மாணவ, மாணவிகளுக்கு ரவை, சேமியா கேசரி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் உள்ள 9 அரசு தொடக்கப்ப ள்ளியில் உள்ள 1,119 மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடூர் நகரவை தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி, வருவாய் கோட்டாச்சியர் பூமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ரவை, சேமியா கேசரி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் அனிதா, நகர செயலாளர்கள் முகமதுயூனுஸ், முனுசாமி, நகர மன்ற உறுப்பினர் குழு தலைவர் முகமதுஉசேன், நகர மன்ற உறுப்பினர்கள் ஓ.கே.நடராஜ், சிவமலர், சுமதி, விஜய்கான்டீபன், உமாராணி கணேசன், ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் யாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.