search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டத்தால்  பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
    X

    காலை உணவு திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

    • மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
    • 63 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவா்கள் பயன்பெறுவா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    காலை உணவு திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் 63 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவா்கள் பயன்பெறுவா். மேலும் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது.

    மேலும், பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரிக்கும், வேலைக்குச் செல்லும் தாய்மாா்களின் பணிச் சுமையும் குறையும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா். மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ஜாகிா் உசேன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், நோ்முக உதவியாளா் கோல்டி சாராள், கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.திராவிடமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், மோகன் குமாரமங்கலம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா்,கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவா் சுனில், நெலாக்கோட்டை ஊராட்சித் தலைவா் டொ்மிளா, மசினகுடி ஊராட்சித் தலைவா் மாதேவி,கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×