என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கத்திரிக்காய், முருங்கைக்காய் விலை தொடர்ந்து உயர்வு : பொங்கல் பொருட்கள் வாங்க மார்க்கெட்- கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
- நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலின்போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடைகள் உடுத்தி குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
நெல்லை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
அலைமோதும் கூட்டம்
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலின்போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடைகள் உடுத்தி குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள், உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சீர்வரிசை பொருட்கள்
குறிப்பாக தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசை கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு, இனிப்பு வகைகள் போன்றவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் சாலை அதிகாலை முதல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அந்த சாலை முழுவதிலும் வியாபாரிகள் கரும்பு, காய்கறிகள், மஞ்சள் குலைகள் உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மார்க்கெட்-கடைகள்
நெல்லை டவுன் ரதவீதிகள், பாளை மகாராஜாநகர் உழவர் சந்தை, பாளை காந்தி மார்க்கெட், மேலப்பாளையம் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் காய்கறி விற்பனை சூடுபிடித்தது. கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசை பொருட்களாக வழங்க வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் 2 கிலோ முதல் 5 கிலோ வரை மொத்தமாக வாங்கி சென்றனர்.
இதேபோல மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பல சரக்குகடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
காய்கறிகள் தட்டுப்பாடு
மார்க்கெட்டுகளில் இன்று ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.100 முதல் ரூ.130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை நிற கத்தரிக்காய் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டது. முருங்கைக்காய் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140 முதல் ரூ.200 வரையிலும் விற்பனையானது. பெரும்பாலான இடங்களில் கத்தரிக்காய், முருங்கைக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
நெல்லையில் இன்று மண்பானைகள் அளவு வாரியாக ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புக்கட்டிகள் ரூ.150 வரையிலும் விற்பனையாகிறது. 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40 வரை விற்பனையாகிறது.
காய்கறிகள்கிலோ(ரூ.)
தக்காளி30
கேரட் 55
கத்தரிக்காய்130
சேமங்கிழங்கு90
வள்ளிகிழங்கு100
சிறுகிழங்கு60
நெல்லிக்காய்80
பிடிகிழங்கு150
உள்ளி100
வெண்டைக்காய் 80
அவரைக்காய்80
சீனி அவரை60
பீன்ஸ் 80
நாட்டு மாங்காய் 90
மிளகாய்80
பூசணிக்காய் 25
உருளைக்கிழங்கு 35
சவ்சவ்25
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்