என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
- பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவையும் கொள்ளை போனது.
- கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவர் கடந்த 11-ந் தேதி திருச்சியில் உள்ள அவரது மகன் சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
பின், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின், பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.