search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி அருகே விபத்தில் சிக்கி அண்ணன்- தங்கை பலியானது எப்படி?
    X

    பூதப்பாண்டி அருகே விபத்தில் சிக்கி அண்ணன்- தங்கை பலியானது எப்படி?

    • திட்டுவிளை-துவரங்காடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் அண்ணன்- தங்கை இருவரும் பலியானார்கள்.
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூர் பணிக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26), ஐ.டி.ஐ. படித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள மிட்டாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.


    அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ராஜேஸ்வரியும், மணிகண்டனும் அண்ணன் தங்கை உறவு முறை ஆகும். இதனால் தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக வேலைக்கு வருவது வழக்கம்.

    நேற்று காலையில் வழக்கம் போல் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். திட்டுவிளை-துவரங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று மோதி மணிகண்டன் ராஜேஸ்வரி இருவரும் பலியானார்கள்.

    பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மணிகண்டன், ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த கார் டிரைவர் முத்துக்குமார் (25) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


    விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மணிகண்டன், ராஜேஸ்வரி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த வேன் அதிவேகமாக வந்த இவர்கள் மீது மோதி உள்ளது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகி இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×