என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு
- பொதுமக்கள் ஆங்காங்கே இந்த மக்காத குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர்.
- எரிப்பதனால் மாசு கட்டுபாடு ஏற்பட்டு மனிதர்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றனர்
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, பொ.மல்லாபுரம் என பத்து பேரூராட்சிகளும், 251 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
இந்த பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் என பல ஆயிரம் பேர் நியமித்து தூய்மையான நகர, கிராமப் பகுதிகளை உருவாக்குவதில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இருந்த போதிலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காததாலும், மாசு கட்டுப்பாட்டை உருவாக்கும் மக்காத குப்பைகள் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள், பெருமளவு சட்ட விரோதமாக மாவட்டம் முழுவதும் கடைகளில் விற்பனைக்கு குவிந்து பயன்பாடு அதிகப்படுத்தியுள்ளதாலும், அரசுக்கு இந்த பணி பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்துச் செல்வதற்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்தினாலும் , நகரப் பகுதிகள், கடைவீதி, மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ெரயில் நிலையம், ஊர்களின் எல்லைப் பகுதிகள் மக்கள் வாழக்கூடிய இடங்களில் ஆங்காங்கே மழை போல மக்காத குப்பைகளான தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள், அட்டைகள், செராமிக்ஸ், பொருட்கள் உலோக குப்பைகள், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள் என்பன அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே மழை போல குவிக்கப்படுகிறது.
தூய்மை பணியாளர்கள் வீடு தோறும் வந்து இந்த கழிவுகளை சேகரித்தாலும் மக்கள் ஆங்காங்கே தூக்கி வீசி விட்டு செல்வதால் அவைகள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே குவியலாக குவிந்து கிடக்கிறது. இவற்றை சேகரிப்பதில் தூய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள், மோட்டார் வாகனங்கள் மூலம் இயங்கும் வசதி உள்ள வண்டிகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளதால் சேகரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே இந்த மக்காத குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர்.
இதனால் மாசுக் கட்டுப்பாடு ஏற்பட்டு மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், விலங்குகள், தாவரங்கள், சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் இவற்றினால் மண் வளமானது பாதிக்கப்படுகிறது. இவற்றை எரிப்பதனால் மாசு கட்டுபாடு ஏற்பட்டு மனிதர்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்